தவறான தகவல் வெளியிட்ட நடிகர் மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

நடிகரும் தொலைக்காட்சி பிரமுகருமான வரதராஜன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வீடியோவில் தனது நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், இதனையடுத்து கொரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல முயற்சித்தபோது எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை, இங்கு அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி மருத்துவமனைகளின் எம்டி உள்பட பலரிடம் பேசியும் யாரும் உதவ முன்வரவில்லை என்றும், எனவே சென்னையில் உள்ள எந்த மருத்துவமனைகளிலும் பெட் இல்லாததால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளதாகவும், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லை என்று தவறான தகவல் வெளியிட்ட டிவி நடிகர் வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

மணிரத்னத்துடன் இணையும் 9 இயக்குனர்கள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது 'பொன்னியின் செல்வன்' என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன்

தயாரிப்பு, இயக்கத்தில் களமிறங்கும் முன்னணி நடிகை!

ஒரு முன்னணி நடிகை, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் களமிறங்குவது மிக அரிதாகவே இந்திய திரையுலகில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னணி நடிகை ஒருவர் ஒரு திரைப்படத்தை

ஊரடங்கில் டாஸ்மாக் திறப்பது போல அல்ல 10ம் வகுப்பு தேர்வு: நீதிபதிகள் அதிரடி கருத்தால் பரபரப்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடத்தி வந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்

யாரெல்லாம் முகக்கவசம் அணிய வேண்டும் – WHO கூறியுள்ள புது விதிமுறைகள்!!!

உலகச் சுகாதார அமைப்பானது தனது முந்தைய வழிகாட்டுதல்களில் “ஆரோக்கியமான நபர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் வயதானவர்கள்,

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் அஞ்சலி?

நானும் ரெளடிதான்' 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய திரைப்படங்களை அடுத்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்