close
Choose your channels

கமல் கட்சிக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

Monday, July 8, 2019 • தமிழ் Comments

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஜூலை 8ஆம் தேதி அதாவது இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது. இந்த கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் 'அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசனின் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக வைகோவின் தேசத்துரோக வழக்கு, நந்தினி கைது உள்பட எந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், இந்த கூட்டத்திற்கு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz