100 நாள் வீடு, 100 நாள் பிக்பாஸ் வீடு, இதுதான் கமல் அரசியல்: அமைச்சர் ஜெயகுமார்

கொரோனா வைரஸ் பயம் காரணமாக 100 நாட்கள் வீட்டுக்குள் இருந்த கமல்ஹாசன், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்கவுள்ளார் என்று அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பத்ததில் இருந்தே அவரது முதல் டார்கெட் அதிமுக தான். கடந்த மூன்று வருடங்களாக அவர் அதிமுக ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சனம் செய்வதும், அதற்கு அமைச்சர்கள் பதிலடி தருவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் இன்று கிண்டியில் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, கமல் குறித்த கேள்வி ஒன்றுக்கு, ‘கொரோனாவிற்கு பயந்து கமல்ஹாசன் 100 நாட்கள் வீட்டிற்குள் முடங்கியிருந்தார். அறிக்கை மூலமே அரசியல் நடத்தினார். தற்போது கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் செல்லப்போகிறார் என்று கிண்டலுடன் கூறினார்.

மேலும் நாங்கள் கடந்த 150 நாட்களாக உயிரை பணயம் வைத்து களப்பணியாற்றி வரும் நிலையில் கமல் என்றைக்காவது ஒருநாள்தான் வெளியே வந்து அரசியல் செய்தாரா? என்று கேள்வி எழுப்பினார். அமைச்சரின் இந்த கேள்விக்கு கமல் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

எந்த சாமியும் செய்யாததை எடப்பாடி பழனிசாமி செய்தார்: காமெடி நடிகர்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கொரோனா வைரஸ் காரணமாக கலைவாணர் அரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே.

இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல: சூர்யா பட பாடல் பிரச்சனை குறித்து விஜய் பட இயக்குனர்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்த வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது

தமிழக அமைச்சரை நேரில் சந்தித்த கே.பாக்யராஜ்: என்ன காரணம்?

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் சங்கரதாஸ் சுவாமி அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ்

ஆன்லைன் வகுப்பு கொடுமை… பாடம் புரியாததால் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!!

சிவகங்கை அருகே ஆன்லைனில் நடத்தும் பாடம் புரியாமல் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு… தமிழக அரசு அதிரடி!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது