close
Choose your channels

ஜப்பானில் படமாகும் ராஜீவ் மேனனின் அடுத்த படம்: ஹீரோ யார்?

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'சர்வம் தாளமயம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ராஜீவ் மேனன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

ராஜீவ் மேனனின் அடுத்த படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா என்ற தகவல் வெளிவந்துள்ளது. 'சென்னை 28', 'கலகலப்பு 2, 'தமிழ்ப்படம் 2' ஆகிய மூன்று இரண்டாம் பாக வெற்றிப்படங்களை அடுத்து சிவா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ராஜீவ் மேனனின் இந்த படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறவுள்ளதாகவும் இந்த படம் ஒரு த்ரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.