பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்னை மாடல் அழகி: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Thursday,September 24 2020]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்

ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், கிரண் ரத்தோட், ஆஜித், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சஞ்சனா ஷெட்டி, பாடகர் வேல்முருகன், லட்சுமிமேனன் அம்ரிதா ஐயர், ஷாலு ஷம்மு, அனுமோகன் உள்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற சீரியலிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள மாடல் அழகி சம்யுக்தா கார்த்திக் என்பவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இவரும் சென்னை ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே கடந்த சீசன்களில் மீராமிதுன் உள்பட ஒரு சில மாடல் அழகிகள் பிக்பாஸில் கலந்து கொண்ட நிலையில் தற்போது சம்யுக்தா கார்த்திக் என்ற மாடல் அழகியும் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

More News

இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி புகைப்படங்கள்!

தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது 'தி ஃபேமிலி மேன்' என்ற வெப்தொடரில் நெகட்டிவ் வேடத்தில் நடித்து வருகிறார்

அக்சராஹாசனின் அடுத்த பட டீசரை வெளியிடும் ஸ்ருதிஹாசன்!

அக்சராஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'டிரண்ட் லவுட்' என்ற நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்கு 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

தோனியின் கேப்டன்சிக்கு வெறும் 4 மதிப்பெண்கள் தான்: பிரபல கிரிக்கெட் வீரர்!

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் பரபரப்பாக இருந்தது என்பதும் இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்': புதிய தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் நான்கு நடிகைகள் கைதா? பரபரப்பு தகவல் 

திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்த தகவல் அவ்வப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது சம்பந்தமான வழக்கில் பாலிவுட் நடிகை ரியா