close
Choose your channels

தெருவில் பிச்சை எடுத்த என்கவுண்டர் போலீஸ் அதிகாரி… அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்!!!

Tuesday, November 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெருவில் பிச்சை எடுத்த என்கவுண்டர் போலீஸ் அதிகாரி… அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்!!!

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக செயல்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெருவில் பிச்சைக்காரர் போல பிச்சை எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாநிலத்தின் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் மனீஷ் மிஸ்ரா. இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும் என்கவுண்டர் போலீசுக்கான பயிற்சியில் இவர் 250 காவலர்களுள் சிறந்த தடகள வீரராகவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இதனால் அம்மாநிலத்தின் குனா போன்ற பல்வேறு மாவட்டங்களில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருந்து மனிஷ் மிஸ்ரா தொலைந்து போனதாகக் கூறப்படுகிறது. அவரை 11 ஆம் தேதி உடன் பணியாற்றிய சில நண்பர்கள் ரோந்து பணியின்போது அடையாளம் கண்டு அதிர்ந்து போய் இருக்கின்றனர். இதனால் அவரை மீட்டு தற்போது காப்பகத்தில் சேர்த்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய மனக்கோளாறு காரணமாக மனிஷ் தனது வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அப்போது வீட்டில் இருந்து அவர் அடிக்கடி காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. அப்படி காணாமல் போனவர் மனிஷை 15 வருடங்களுக்கு பிறகு நண்பர்கள் ஏதேச்சையாகக் கண்டுபிடித்து உள்ளனர்.

லக்ஷர் பகுதியில் சாலையின் ஓரமாக நடுங்கிக் கொண்டிருந்த மனிஷ்க்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த அவரது நண்பர்கள் யாரோ ஒரு பிச்சைக்காரர் என மனம் இரங்கி சட்டை மற்றும் காலணிகளைக் கொடுத்து இருக்கின்றனர். இப்படி கொடுத்துவிட்டு சென்ற அவர்களை மனிஷ் பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார். உடனே அதிர்ந்துபோன அவர்கள் அடையாளம் தெரிந்து கொண்டு மனம் வருந்தி தற்போது காப்பகத்தில் சேர்த்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.