ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை புரமோஷன் செய்யும் கிரிக்கெட் வீராங்கனை

  • IndiaGlitz, [Monday,July 01 2019]

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில மாதங்களாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழில் கெளசல்யா கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யாவும், வில்சன் கேரக்டரில் நடித்திருந்த சிவகார்த்திகேயனும் தெலுங்கிலும் நடித்துள்ளனர். 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் நடிகை ராஷி கண்ணாவும் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்கிறார். கிரிக்கெட் வீராங்கனை குறித்த ஒரு படத்திற்கு நிஜ கிரிக்கெட் வீராங்கனையே புரமோஷன் செய்வது பொருத்தமானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இயக்குனர் சங்கத்தலைவர்: பாரதிராஜா எடுத்த அதிரடி முடிவு

இயக்குனர் சங்க தலைவராக ஒரு மாதத்துக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று திடிரென அவர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

நாமினேஷனில் லாஸ்லியாவுமா? அதிர்ச்சியில் ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் யாருடைய வம்புக்கும் போகாமல் தன் அழகாலும் வசீகரத்தாலும் அனைவர் மனதையும் கவர்ந்து வந்த லாஸ்லியாவை யாருமே நாமினேஷன் செய்யவில்லை

இதுபோல் ஒரு படம் இதுவரை வந்ததில்லை, இனியும் வராது: விக்ராந்த்

ஒட்டகத்தை முக்கிய கேரக்டராக்கி உருவாக்கப்பட்டுள்ள முதல் இந்திய திரைப்படமான 'பக்ரீத்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

உலக பிரபலம் தமிழருடன் சச்சின் விரும்பி எடுத்த புகைப்படம்

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது இந்தியர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின்

இணையத்தில் வைரலாகும் 'பிகில்' விஜய்யின் ஐடி கார்டு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விஜய், அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்