உங்க பயம் தான் அவனோட ஆயுதம், எதுக்கு பயந்து ஓட்றிங்க.. மித்ரன் ஜவஹரின் 'அரியவன்' டீசர்..!

  • IndiaGlitz, [Thursday,February 16 2023]

தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி’ ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கிய அடுத்த திரைப்படம் ’அரியவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சமூகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு தீர்வு காணும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஈஷான் நாயகனாகவும், ப்ராணலி நாயகியாகவும் அறிமுகமாகியுள்ளனர். மேலும் இந்த படத்தில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.

மாரிச்செல்வன் கதை எழுத, எடிட்டிங் மா தியாகராஜன் மற்றும் ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ மேற்கொள்ள, எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இளம்பெண்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி கொலை செய்யும் கும்பலை நாயகன் எப்படி பிடிக்கின்றார் என்பது தான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.
 

More News

மனைவியை அசத்த பாஸ்போர்ட் டேட்டா சிஸ்டத்தை ஹேக் செய்த கணவர்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

மனைவியிடம் நல்ல பெயர் வாங்கி அவரை அசத்த வேண்டும் என்பதற்காக மும்பை காவல் துறையில் உள்ள பாஸ்போர்ட் டேட்டா சிஸ்டத்தை ஹேக் செய்த கணவர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். 

தமிழின் முதல் லெஸ்பியன் திரைப்படம்.. ஜோதிகாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

 தமிழில் முதல் லெஸ்பியன் திரைப்படமான 'காதல் என்பது பொதுவுடமை' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த காதலர் தினத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தின் போஸ்டருக்கு நடிகை ஜோதிகா

அஜித் கைவிட்டாலும் கைவிடாத நெருங்கிய நண்பர்... விக்னேஷ் சிவனின் அடுத்த பட ஹீரோ இவர் தான்..!

அஜித் நடிக்க இருந்த 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் இதனை அடுத்து அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமணி இயக்க

கல்யாணத்திற்கு வந்த நடிகை காருக்குள் இருந்த நபருக்கு கொடுத்த லிப்கிஸ்:  வைரல் வீடியோ!

 கல்யாணத்துக்கு வந்த நடிகை காருக்குள் இருந்த நபர் ஒருவருக்கு லிப்கிஸ் கொடுத்த வீடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

எமோஷனலாக என்னை டச் செய்துவிட்டது: சமீபத்தில் வெளியான படம் குறித்து ராகவா லாரன்ஸ்..!

சமீபத்தில் வெளியான படம் குறித்து நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறிய போது இந்த படம் தன்னை எமோஷனலாக டச் செய்து விட்டது என்றார்.