எங்க கல்யாணத்துல எங்களுக்கே சாப்பாடு கிடைக்கல - மு.க. முத்துவின் மனைவி சொன்ன சுவாரஸ்ய தகவல்.

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

பின்னணி பாடகர் இசை சித்தர் சி.எஸ். ஜெயராமன் அவர்களின் மகளும் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் மகன் மு.க முத்துவின் மனைவியுமான சிவகாமசுந்தரி அவர்கள் IndiaGlitz-க்கு அளித்த பேட்டியில், எனது திருமணம் மிக பிரம்மாண்டமாக ஆபிட்ஸ்பரியில் நடந்தது.

எங்களது திருமணத்திற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்றைய கவர்னர் மற்றும் ஜெயில் சிங் அச்சமயத்தில் வெள்ளி வேலை படத்தில் அறிமுகமாக இருந்த ஜெயலலிதா அவர்கள் நடிகை கே.ஆர். விஜயா மற்றும் பலர் வந்திருந்தனர். கல்யாணத்தின் முதல் நாள் நடிகர் திலகம், சிவாஜி கணேசன் அவர்கள் வந்திருந்து என்னுடன் போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.

மறுநாளும் திருமணத்திற்கு வந்தார் திருமணத்தில் அதிகமான கூட்டம் இருந்தது. மணமக்களாகிய எங்களுக்கே சாப்பாடு இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு கூட்டம் வந்தது. எனக்கும் தலைவரின் மகள் செல்வி அவர்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. எனது தந்தை சி.எஸ். ஜெயராமன் அவர்கள் ஒருநாள் ரிக்கார்டிங் தியேட்டருக்கு வரும்போது ஒரு பெண் வெளியே நின்று கொண்டிருந்தாள் என்னவென்று விசாரித்த போது அவர்கள் எனது பெயர் ஜானகி பாடல் பாட வந்தேன் வாய்ப்பு இல்லை படத்தில் அன்பாலே பேசிய என் அறிவு செல்வம் தங்கம் என்று பாடல் பாடுகிறேன். அதற்கு ஒரு ஹம்மிங் வாய்ஸ் வேண்டும் இந்த பெண்ணுக்கு மொழி தெரியாவிட்டாலும் ஹம்மிங் மட்டும் கொடுக்கச் சொல்லுங்கள் என்று அறிமுகப்படுத்தினார் அதுதான் எஸ் ஜானகி.

தமிழில் கொடுத்த முதல் ஹம்மிங். எனது தந்தை சி.எஸ்.ஜெயராமன் அவர்களை பார்க்க வருகின்ற அனைவரையும் முதலில் சாப்பிட்டீர்களா என்று கேட்பார். எங்கள் வீட்டில் எப்பொழுதும் வருகின்ற அனைவருக்கும் சாப்பாடு செய்யப்பட்டு கொண்டே இருக்கும். இதற்கென்று இரண்டு வேலைக்காரர்கள் இருந்தார்கள்.
 

More News

நீ யாரு.. நல்லா வருவேடா... கவுண்டமணியிடம் வாழ்த்து பெற்ற 'சிறகடிக்க ஆசை' நடிகர்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவரை கவுண்டமணி அழைத்து 'நீ யாரு,

ரஜினி, விஜய் படங்களை அடுத்து ஜப்பானில் சக்கை போடு போடும் கார்த்திக் சுப்புராஜ் படம்.. மகிழ்ச்சியான பதிவு..!

கடந்த பல ஆண்டுகளாக ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வசூலை குவித்து வருகிறது என்பதும் அவர் நடித்த 'முத்து' படத்தில் இருந்து அதன் பிறகு வெளியான அனைத்து படங்களும் ஜப்பானில் அதிக வசூலை

அருண் விஜய்யின் 'ரெட்ட தல'.. சூப்பர் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்..!

அருண் விஜய்யின் 36 வது திரைப்படமான 'ரெட்ட தல' என்ற படம் குறித்த அறிவிப்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை அருண் விஜய் தனது எக்ஸ் தள

மே 10ல் ரிலீஸ் ஆகும் கவின், சந்தானம் படம்.. இன்னொரு படமும் அதே நாளில் ரிலீஸ்.. இன்று மாலை டிரைலர்..!

கவின் நடித்த 'ஸ்டார்' மற்றும் சந்தானம் நடித்த 'இங்க நான் தான் கிங்கு' ஆகிய படங்கள் மே 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதே நாளில் இன்னொரு இளம் நடிகரின் படம் ரிலீஸ்

'குட் பேட் அக்லி' படக்குழு எடுத்த அதிரடி முடிவு.. 'விடாமுயற்சி' படக்குழுவினர் அதிர்ச்சி..!

அஜித் நடிக்கவிருக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் அதற்கு முன்பே 'விடாமுயற்சி