close
Choose your channels

தமிழக முதல்வராக பதவியேற்றார் முக ஸ்டாலின்: கமல் பங்கேற்பு

Friday, May 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வராக சற்றுமுன் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்

தமிழக முதல்வராக பதவி ஏற்றிருக்கும் முக ஸ்டாலின் விழாவிற்கு பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் முக ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலரும், பாஜக சார்பில் இல கணேசன் அவர்களும், காங்கிரஸ் சார்பில் குண்டுராவ், கே.எஸ் அழகிரி ஆகியோர்களும் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காலை மிகச் சரியாக 9 மணிக்கு தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதை அடுத்து துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும் தற்போது பதவி ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.