திரைத்துறைக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்த ஸ்டாலின்

  • IndiaGlitz, [Thursday,July 06 2017]

கடந்த 1ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே வரி' என்ற முழகத்துடன் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் மாநில அரசின் வரிகள் ரத்தாகும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஜிஎஸ்டி வரி வந்த பின்னரும் தமிழகத்தில் மாநில அரசின் வரி தொடர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக திரைத்துறையினர் ஜிஎஸ்டி வரி 28% மற்றும் மாநில அரசின் வரி 30% மற்றும் இதர வரிகள் என 60%க்கும் மேலாக வரிகட்ட வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. திரையுலக பிரமுகர்கள் முதல்வர் பழனிச்சாமி உள்பட அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் முதல்முறையாக திரைத்துறையினர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். "திரைத்துறைக்கு கேளிக்கை வரி விதிப்பை ஏற்க முடியாது. கேரளாவில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தவுடன் திரைத்துறையினரின் வேண்டுகோளை ஏற்று கேளிக்கை வரியை கேரள அரசு ரத்து செய்தது. அதுபோல் தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "திரைத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ளதை இரட்டை வரியாக கருத முடியாது. ஜிஎஸ்டி அமல்படுத்தவதற்கு முன்னதாகவே கேளிக்கை வரி திரைத்துறையிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

More News

பாவனாவின் திருமணத்தை தடுக்க முயற்சித்த விஐபி யார்?

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகையே கதிகலங்க செய்தது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் பல்சர் சுனி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது...

எம்.ஜி.ஆருக்கு பின் தமிழக அரசியலில் முதல்முறையாக நடந்த அதிசயம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைப்பதும்...

மோசமான பெண்கள் வாய்ப்புக்காக இதையும் செய்வார்கள்: பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு

பிரபல மலையாள நடிகர், எம்பி மற்றும் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவராக இருந்து வரும் இன்னொசெண்ட், மோசமான பெண்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கேட்டு படுக்கை வரை செல்வதாகவும், மலையாள திரையுலகை பொருத்தவரையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் யாரிடமும் இல்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ரிலீசுக்கு தயாராகும் 'ஆதே கண்கள்' நாயகியின் அடுத்த படம்

'நெடுஞ்சாலை', 'அதே கண்கள்' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை ஷிவ்தா நாயர் நடித்து வரும் அடுத்த படம் 'கட்டம்'.

பிரபல பாடலாசிரியர் இயக்கும் 2வது படம்

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமான ' வெயில்', தனுஷின் 'ஆடுகளம்', ஜிவி பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் ஏகாதேசி அவர்கள் ஏற்கனவே 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' என்ற படத்தை இயக்கியிருந்தார்