தினகரன் அணியில் 18 எம்.எல்.ஏக்கள்: விரைவில் சட்டமன்ற தேர்தலா?

  • IndiaGlitz, [Tuesday,June 06 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த அதிமுக, கட்சியின் பெயரையும், சின்னத்தையும் இழந்தது. இந்த நிலையில் சசிகலா அணியின் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது தமிழக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென தினகரன் அணி என புதிய அணி ஒன்று உருவாகியுள்ளது.

சமீபத்தில் ஜாமீன் பெற்று திகார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரனுக்கு இதுவரை முன்னாள் அமைசர் செந்தில்பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக இருப்பதாகவும், இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபித்த நிலையில் தற்போது 18 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக திரும்பியுள்ளதால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

சாக்லேட் வியாபாரியின் வங்கிக்கணக்கில் திடீரென டெபாசிட் ஆன ரூ.18 கோடி

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது.

நயன்தாராவின் பயந்தாங்கொள்ளி கணவரா விஜய்சேதுபதி?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட 'ராமாயணம்' இயக்குனரின் வாரிசு

கடந்த 1980களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இராமாயணம் தொடரை இயக்கியவர் பிரபல பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ராவின் சகோதரர் ராமான்ந்த் சாகர்...

விஜய் பிறந்த நாளில் ஃபர்ஸ்ட்லுக், சூர்யா பிறந்த நாளில் டீசர்?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபர்ஸ்ட்லுக் விஜய் ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்த நாள் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

தேசிய விருது பெற்ற ரீமேக் படத்தில் பிர்யதர்ஷன் - உதயநிதி

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை  மன்சூட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சந்தோஷ் தயாரிக்கவுள்ளார் என்பதையும் நேற்று பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன...