மநீம முக்கிய தலை.....நாளை திமுக-விற்கு இடம்பெயருகிறது...!

  • IndiaGlitz, [Tuesday,June 08 2021]

கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யத்தில், முக்கிய புள்ளியாக இருந்த திரு.மகேந்திரன் அவர்கள், நாளை திமுக-வில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத்தலைவராக இருந்து, அக்கட்சிக்காக சிறப்பாக பணியாற்றியவர் கோவையைச் சேர்ந்த மகேந்திரன் அவர்கள். கடந்த 2019-இல் நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது, 1.44 லட்சம் வாக்குகளை பெற்று, தமிழக அரசியல் கட்சியினரை ஆச்சரியப்பட வைத்தார். இதேபோல் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும், சிங்காநல்லூர் தொகுதியில் களமிறங்கி பெருவாரியான வாக்குகளை பெற்றார்.

ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் கமல் முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதியில் பாஜக, வானதி ஸ்ரீனிவாசன் 1,358 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து கட்சியில் முக்கிய பதவி வகித்து வந்த துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமாரவேல், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, சமூக ஆர்வலர் பத்மபிரியா உள்ளிட்டோர் ஒவ்வொருவராக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்கள்.

இந்நிலையில் மகேந்திரன் திமுக-வில் இணையவிருப்பதாக செய்திகள் சமீபத்தில் வெளியானது. இவருக்கு தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகத்தின் (TIDCO) சேர்மன், பதவி கொடுக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது. மேற்கு மண்டலம் முழுவதையும் அதிமுக கைப்பற்றி விட்டதால், இந்த நிலைமையை மாற்ற ஸ்டாலின் கடுமையாக போராடி வருகிறார். அதற்காக உள்ளூர் நிர்வாகிகளை முன்னேற்றுவதில், திமுக தலைமை முக்கிய பங்கெடுத்து வருகிறது. இதனால் கோவை மண்டலத்தில் செல்வாக்கு உள்ள, மகேந்திரன் அவர்களுக்கு திமுகவில் சேர்மன் பதவி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக -வில் இணையவுள்ளார் மகேந்திரன். இவருடன் கோவை மாவட்ட ஆதரவாளர்கள் சுமார் 5000 பேரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணையவுள்ளதாக செய்திகள் கூறுகிறது.

 

More News

இளையராஜா ஓவியத்தை வைத்து போட்டோஷூட்: நடிகை கஸ்தூரியின் நெகிழ்ச்சியான பதிவு!

பிரபல ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றது என்பதும் சக ஓவிய கலைஞர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்கள் அவருடைய ஓவியத்திற்கு ரசிகர்கள் என்பதும் தெரிந்ததே 

சமந்தாவை ஏமாத்திட்டாங்க: 'தி ஃபேமிலிமேன் 2' குறித்து மனோபாலா பேட்டி!

சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'தி ஃபேமிலிமேன் 2' என்ற வெப்தொடர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழகத்தின் பிரபலங்களான பாரதிராஜா சீமான் உள்ளிட்ட பலரும்

விஜய் மகன் சஞ்சய் லேட்டஸ்ட் புகைப்படம்: ஹீரோ லுக் என குவியும் கமெண்ட்ஸ்!

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட படிப்பு படித்து முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் என்பது தெரிந்ததே. அவர் விரைவில் தமிழ் திரை உலகில் இயக்குனர்

'மாநாடு' படத்தின் முக்கிய உரிமையை பெற்ற யுவன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி குறித்த தகவல்!

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாநாடு'.

'சூர்யா 40' படத்திற்கு மாஸ் டைட்டில்: பிறந்த நாளில் அப்டேட் தந்த இயக்குனர் பாண்டிராஜ்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சூர்யா 40'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த