close
Choose your channels

நிஜ உலகில் டார்சனாக வாழும் கோடி அன்ட்டில்..! விலங்குகளுடன் வைரல் வீடியோ.

Tuesday, February 25, 2020 • தமிழ் Comments

நிஜ உலகில் டார்சனாக வாழும் கோடி அன்ட்டில்..! விலங்குகளுடன் வைரல் வீடியோ.    ஃபுளோரிடாவில் தனது தந்தைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலப்பரப்புள்ள காட்டில் வசித்து வருகிறார் இந்த நிஜ உலக டார்சன். இங்கு இவருக்கு டிஸ்னியின் டார்சன் திரைப்படத்தில் வருவது போலவே பல விலங்கு நண்பர்கள் உள்ளனர். அவற்றிற்கு இவர் பெயர் வைத்து அழைத்து அவற்றோடு பேசவும் செய்கிறார்.

கோடி அன்ட்டில் என்பது தான் அவரது நிஜ பெயர், இருந்தாலும் இவர் தன்னை டார்சன் என்று அழைத்துக்கொள்ளவே விரும்புகிறார். இன்ஸ்டாவிலும் டிக்டாக்கிலும் இவர் மிருகங்களுடன் இருக்கும் வீடியோவை வெளியிடுகிறார். அந்த வீடியோக்களால் அவருக்கு உருவான ரசிகர்கள் பல ஆயிரம் பேர். ஒவ்வோர் வீடியோவும் பல லட்சம் பார்வைகளைக் கடக்கிறது.          

ஒன்பது டன் எடை கொண்ட யானையை தனது மூத்த சகோதரியாக அறிமுகப்படுத்துகிறார். உராங்குட்டான்களும் கொரில்லாக்களும் இவருக்கு உடன் பிறவா தம்பி தங்கைகள். புலிகள் இவருக்கு விருப்பமான நண்பர்கள். எப்போதும் புலிகளுடனும் சிங்கங்களுடனுமே விளையாடுகிறார். இவரது காட்டில் சாஃபாரிக்காக பல சுற்றுலாப்பயணிகள் வந்து விலங்குகளை பார்த்து செல்கின்றனர். இவரது நண்பர்களுடன் பயணிகளுக்கு தனது காட்டினை சுற்றிக்காட்ட  நபர் ஒன்றுக்கு 200 டாலர்கள் வரை வசூலிக்கிறார்கள். 

இவர்கள் குடும்பத்தினர் மொத்தமும் இந்தக்காட்டை பராமரிப்பதிலும் சுற்றுலாப்பயணிகளுக்கான சஃபாரி ஏற்பாடு செய்வதிலும் தங்கள் பணியை செய்கின்றனர். வசூலிக்கப்படும் பணம் அங்கு வாழும் விலங்குகளுக்காக செலவிடப்படுவதாக கூறுகிறார் இந்த விலாங்குகளின் நண்பர்.

View this post on Instagram

My brother Chai

A post shared by Kody Antle (@kodyantle) on

View this post on Instagram

Belly rubs ??

A post shared by Kody Antle (@kodyantle) on

View this post on Instagram

My brother Chai

A post shared by Kody Antle (@kodyantle) on

Get Breaking News Alerts From IndiaGlitz