மீனவர் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? இனியும் வேடிக்கை பார்க்கலாமா மத்திய மாநில அரசுகள்?

  • IndiaGlitz, [Tuesday,March 07 2017]

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, மீனவர்களை தாக்கிக் காயப்படுத்துவதோடு அவர்களுடைய படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறையில் அடைப்பது என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுமைகள் நடந்து வருகிறது. இந்த கொடுமைக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை என்ன தீர்வு செய்துள்ளது என்று மீனவர்கள் கொந்தளிக்கின்றனர்.
இலங்கை கடற்படையினர்களின் அட்டகாசம் தற்போது ஒருபடி முன்னேறி கண்மூடித்தனமாக சுடவும் செய்துள்ளனர். இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு மீனவரின் உயிர் அநியாயமாக பலி ஆகியுள்ளது, சுட்டு கொல்லும் அளவுக்கு மீனவர்கள் என்ன தீவிரவாதிகளா? மீனவர்களின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா?
மீனவர்களுக்கு எல்லைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் இரு நாட்டு மீனவர்கள் தவறுதலாக எல்லை தாண்டி வந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது; மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று இரு நாட்டு அரசுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த ஒப்பந்தம் பேப்பரில் மட்டுமே ஒப்பந்தமாக உள்ளது. நடைமுறை அதற்கு எதிர்மாறாக உள்ளது.
இலங்கையை நட்பு நாடு என்று எண்ணி இனியும் தாமதிக்காமல் இந்த கொடுமைக்கு உடனே முடிவு கட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். மாநில முதல்வரும் உடனடியாக பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களையும் மத்திய அரசு அதிகாரிகளையும் உடனடியாக சந்தித்து இனி ஒரு மீனவர் உயிர் பலியாகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

More News

தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தான். இலங்கை துப்பாக்கி சூட்டுக்கு என்ன செய்ய போகிறது மத்திய அரசு

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் புதிய சாதனை

பிரபல பாடகி விஜயலட்சுமி சமீபத்தில் இசையா? திருமணமா? என்ற கேள்வி வந்தபோது மன தைரியத்துடன் இசையை தேர்வு செய்து திருமணத்தை நிறுத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவர் எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிப்பது போல் தற்போது அவர் இசையில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்....

'பவர்பாண்டி' படம் பார்த்து பாராட்டிய இசையமைப்பாளர்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பல அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ், முதன்முறையாக இயக்கிய திரைப்படம் 'பவர்பாண்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

டிடிவி தினகரனுடன் அதிமுக ஆதரவு நடிகர்கள் திடீர் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் தனது உறவினர் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார். தற்போது டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில்தான் அதிமுக செயல்படுவதாக கூறப்படுகிறது...

பெண் என்பவர் வேற்றுகிரகவாசி அல்ல. சுசிலீக்ஸ் குறித்து சத்யராஜ்

கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் பிரபலங்களின் அந்தரங்கள் கோலிவுட் திரையுலகையே கலங்கடித்துள்ளது. சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்து அவ்வபோது வெளியாகும் வீடியோக்களுக்கு சமூக இணையதள பயனாளிகள் ஊக்கம் அளித்து வருவதையும் சமூக ஆர்வலர்கள் கவலையுடன் பார்த்து வருகின்றனர்...