செய்தியாளர்களின் கேமிராவை உடைத்து சண்டை போட்ட ஷமியின் மனைவி

  • IndiaGlitz, [Friday,March 16 2018]

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் தனது கணவரின் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் திடுக்கிடும் பல குற்றச்சாட்டுக்களை கூறினார். ஆனால் அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே பலர் கருத்து கூறி வருகின்றனர்.

ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் தனக்கு நடந்த முதல் திருமணத்தையும் தனக்கு ஏற்கனவே பிறந்த இரண்டு குழந்தைகளையும் மறைத்து, ஷமியை திருமணம் செய்துள்ளதாகவும் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் தல தோனி, 'ஷமி வீட்டுக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்பவர் அல்ல என்றும், அவரை எனக்கு நன்றாக தெரியும் என்றும் சர்டிபிகேட் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனக்கு உதவி செய்யும்படி ஹசின் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் வெளியே வந்த ஹசினை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர். ஒரு போட்டோகிராபர் ஹசினின் மிக அருகில் சென்று போட்டோ எடுத்ததால் ஆத்திரமடைந்த அவர் அந்த பத்திரிகையாளரின் கேமிராவை வாங்கி உடைத்தார். ஹசினின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சுசீந்திரனின் 'ஏஞ்சலினா' குறித்த முக்கிய அப்டேட்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் கடந்த சில மாதங்களாக 'ஏஞ்சலினா' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்

உண்மை சம்பவ த்ரில் படத்தில் வரலட்சுமி

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார்.

விக்னேஷ் சிவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யா

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்று.

குரங்கணி காட்டுத்தீ: 14ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் சிக்கியதில் ஏற்கனவே 11 பேர் மரணம் அடைந்தனர்.

'தளபதி 62' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்

விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைக்கின்றார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை பாலிவுட்டின் பிரபல பாடகர் விபின் அனேஜா ஒரு பாடலை பாடியுள்ளார்