'ஆட்டம் ஆரம்பம்': 'ருத்ரதாண்டவம்' ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன் ஜி!

  • IndiaGlitz, [Thursday,September 16 2021]

இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் உருவான ’திரௌபதி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவரது அடுத்த திரைப்படமான ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப்படம் மதமாற்றம் செய்பவர்கள் குறித்த கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படம் வெளிவந்தால் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும் நெட்டிசன்களால் கூறப்பட்டது. இருப்பினும் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பும் இன்னொரு பக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ருத்ரதாண்டவம்’ படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டதாகவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மோகன்ஜி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சற்றுமுன் ’ருத்ரதாண்டவம்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

’திரௌபதி’ தாய் மற்றும் ஈசன் துணையுடன் உலகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ஆட்டம் ஆரம்பம் என்று மோகன்ஜி தெரிவித்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’திரௌபதி’ படத்தின் ஹீரோ ரிசார்ட்ஸ் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் தர்ஷா குபதா, ராதாரவி, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விரைவில் டீசர், 'தல' தீபாவளி: 'வலிமை' அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் இந்த திரைப்படத்தின் டீசர் விரைவில் ரிலீஸ் ஆகும் எனவும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில்

ஹர்பஜன்சிங் நடித்த 'பிரெண்ட்ஷிப்' ரிலீஸ்: தமிழில் வாழ்த்து கூறிய 'சின்னத்தல'

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததில் இருந்தே தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் ஒருசில டுவிட்டுக்களை செய்து வருகிறார் என்பதும்

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமா?

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தனது நீண்டநாள் காதலர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேனிலவு

பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என பயந்தேன்: முகமூடி கொள்ளையர்கள் குறித்து பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவரிடம் முகமூடி கொள்ளையர்கள் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற நிலையில் அவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்களோ