நயன்தாராவுடன் மனவருத்தம் ஏற்பட்டது உண்மைதான்: மோகன் ராஜா

  • IndiaGlitz, [Thursday,July 13 2017]

பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் மோகன்ராஜா, 'சுழ்நிலைக்கேற்ற மாதிரி நீ மாறாதே, உனக்கேற்ற மாதிரி சூழ்நிலையை மாற்று' என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன். அறிவு, ஆதி என்ற இரண்டு இளைஞர்களைப் பற்றிய கதைதான் படம்தான் வேலைகாரன்' என்று கூறினார்.
மேலும் 'தனி ஒருவன்' படத்தை இயக்கியபோதே நயன்தாராவுக்கும் எனக்கும் மனவருத்தம் ஏற்பட்டது என்பது உண்மைதான். என்னுடைய முழு கவனமும் மித்ரன் மற்றும் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரிலேயே இருந்தது. இந்த நிலையில் இரண்டு முக்கிய கேரக்டர்களுக்கு இடையே ஒரு பெரிய ஹீரோயினுக்கு, முக்கியத்துவம் கொடுக்காதது என் தவறுதான்.
இருப்பினும் 'தனி ஒருவன்' படத்தைப் பார்த்துட்டு நான் உங்களுக்கு இன்னும் கோ-ஆபரேட் பண்ணியிருக்கலாம்'ன்னு நயன்தாரா சொன்னாங்க. அதுதான் அவங்க பெருந்தன்மை. ஆனால் அந்த படத்தில் நடந்த தவறு 'வேலைக்காரன்' படத்தில் இருக்காது. இந்த படத்தில் மிருளாணி என்ற கேரக்டரில் நயன்தாரா சூப்பராக நடித்துள்ளார்கள்' என்று கூறினார்.

More News

அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கும் என் எதிர்ப்பு இருக்கும்! கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, நிருபர் ஒருவர் உங்கள் நண்பர் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தால் அவருக்கு உங்களுடைய ஆதரவு இருக்குமா? என்று கேட்டார்...

பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமூகத்துக்கு கூறுவது என்ன? கமல் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக புகார்  வந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி சமூகத்திற்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல் தனது பேட்டியில் கூறியதாவது...

கண்ட மாடுகள் எல்லாம் ஆராய்ச்சி மணியை அடிக்க கூடாது. கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், கமல் உள்பட அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது என்பதை நேற்று பார்த்தோம்....

காயத்ரியின் சர்ச்சை 'வார்த்தை' குறித்து கமல் கூறியது என்ன?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளரும், தலைவியுமான காயத்ரி ரகுராம் நேற்று சர்ச்சைக்குரிய ஜாதியை குறிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார்...

'விவேகம்' படத்தின் 3வது பாடல் குறித்து அனிருத்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் 'சர்வைவா மற்றும் 'தலை விடுதலை' பாடல்கள் இணையதளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...