close
Choose your channels

தல அஜித்துக்காக வித்தியாசமான கேரக்டர் வைத்திருக்கும் மோகன்ராஜா

Monday, January 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது. இந்த நிலையில் இயக்குனர் மோகன்ராஜா விரைவில் அஜித் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் சமூக கதை, நெகட்டிவ் கதை அல்லது கமர்ஷியல் கதை எதை தேர்வு செய்வீர்கள் என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மொகன்ராஜா, 'அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் நெகட்டிவ் ஸ்டைல் கதை செய்ய நான் தயார் ' என்று பதிலளித்துள்ளார்.

அஜித் நெகட்டிவ் ஹீரோவாக நடித்த 'பில்லா', 'மங்காத்தா' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் அதிலும் மோகன்ராஜா இயக்கத்தில் அவ்ர் உருவாக்கும் வித்தியாசமான கேரக்டரில் அஜித் நடித்தால் நிச்சயம் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே தளபதி விஜய் நடித்த 'வேலாயுதம்' என்ற ஹிட் படத்தை கொடுத்த மோகன்ராஜா, தல அஜித்துக்கும் வெற்றி படத்தை கொடுப்பார் என்று நம்புவோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.