close
Choose your channels

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டு பிரபலங்கள்

Monday, June 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இம்மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானாலும் இந்த நிகழ்ச்சியை காண என ஒரு பெருங்கூட்டம் இருப்பதால் முதல் இரு சீசன்கள்போல் இந்த சீசனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என கருதப்படுகிறது

இந்த நிலையில் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்களை சேனல் நிர்வாகம் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. இதுகுறித்து கசிந்த தகவல்களின்படி நடிகை மதுமிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் அனந்த் வைத்தியநாதன் என்ற இசைத்துறையை சேர்ந்த ஒருவர் இடம் பெற்றது போலவே 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியிலும் கர்நாடக இசை பாடகரும் வயலின் வித்வானுமாகிய மோகன் வைத்யா இடம்பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.