close
Choose your channels

'ஜெயிலர்' படப்பிடிப்பில் ரஜினியுடன் இரண்டு பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, February 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பின் ரஜினியுடன் இரண்டு பிரபலங்கள் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார் என்ற பகுதியில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இதில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கிஷெராப் ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளனர். ரஜினியுடன் மோகன்லால் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஜாக்கி ஷெராப் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

இன்னும் ஒரு சில நாட்கள் ராஜஸ்தானில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது. மோகன்லால் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை இருப்பதாகவும் ஜாக்கி ஷெராப் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos