close
Choose your channels

மோகன்லாலில் 'லூசிஃபர்' இரண்டாம் பாகம் உருவாகின்றதா?

Monday, October 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘லூசிஃபர்’ . இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பது வெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 175 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை செய்தது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் ’காட்பாதர்’ என்ற திரைப்படம் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கடந்த 2010ஆம் ஆண்டே இயக்குனர் பிரித்விராஜ் கூறிய நிலையில் 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி ‘லூசிஃபர்’ இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு இந்த படத்தை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.