close
Choose your channels

'காப்பான்' படத்தின் மோகன்லால் கேரக்டரின் பெயர் குறித்த தகவல்

Wednesday, January 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது

இந்த நிலையில் இந்த படத்தில் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்த்தே. தற்போது அவருடைய கேரக்டர் பெயர் 'சந்திரகாந்த் வர்மா' என்று தெரிய வந்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் புகைப்படம் ஒன்று லீக் ஆகியுள்ளது. அதில் ஒரு தனியார் தொலைத்தொடர்பு நெட்வொர்க் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் மோகன்லால் கலந்து கொள்வது போல் உள்ளது. இந்த புகைப்படத்தில் பிரதமர் சந்திரகாந்த் வர்மா' அவர்களை வரவேற்கின்றோம்' என்று மோகன்லால் புகைப்படத்துடன் கூடிய ஒரு பேனர் உள்ளது. இதில் இருந்து இந்த படத்தில் மோகன்லால் நடிக்கும் கேரக்டர் பெயர் லீக் ஆகியுள்ளது.

சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.