close
Choose your channels

சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்: மீண்டும் கமல் நடிப்பாரா?

Wednesday, May 20, 2020 • தமிழ் Comments

மோகன்லால், மீனா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ’த்ரிஷ்யம்’ என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. வெறும் 5 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது., அதுமட்டுமின்றி இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கமலஹாசன், கவுதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் ’பாபநாசம்’ என்ற பெயரில் இயக்கி இருந்தார். இந்த படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் முடிவு செய்து இருப்பதாகவும் அதில் மீண்டும் மோகன்லால் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் ’ராம்’ என்ற படத்தை இயக்கி வரும் ஜித்து ஜோசப், அந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற வேண்டியிருப்பதால் அந்த படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு, தற்போது ஜீத்து ஜோசப் ’த்ரிஷ்யம்’ 2ஆம் பாகம் படத்தை இயக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கேரளாவில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின்னர் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த இந்த படமும் முதல் பாகத்தை போல் தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் தமிழில் மீண்டும் கமல் நடிப்பாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz