மார்ச் 27 ரிலீஸ்.. முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு.. மாஸ் நடிகர் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல மாஸ் நடிகர் ஒருவர் தனது படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு உலகம் முழுவதும் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படும் என அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள "எம்புரான்" என்ற திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவான இந்த படம், ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்ற "லூசிபர்" படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால், பிரித்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தீபக் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அதன் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சற்றுமுன் மோகன்லால் தனது சமூக வலைத்தளத்தில், "எம்புரான்" திரைப்படம் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் காலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் மட்டும் 9 மணிக்குப் பிறகு மட்டுமே திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
The first day, first show of #L2E #Empuraan will start at 6:00 AM IST on the 27th of March 2025. Shows across the world will start at the corresponding time in respective time zones.
— Mohanlal (@Mohanlal) March 16, 2025
Stay tuned for further details!
Malayalam | Tamil | Hindi | Telugu | Kannada #March27… pic.twitter.com/OeKas1QOkR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com