2013ஆம் ஆண்டிலேயே இந்திய மொழியை சரளமாக பேசிய 'மணி ஹெய்ஸ்ட்' நடிகை

  • IndiaGlitz, [Tuesday,May 19 2020]

ஓடிடி பிளாட்பாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் மணி ஹெய்ஸ்ட்’ சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் தமிழ் நடிகர் நடிகைகளுடன் ஒப்பிட்டு அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. அந்த அளவுக்கு இந்த சீரியலில் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மணி ஹெய்ஸ்ட்’ சீரியலில் நைரோபி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஆல்பா ஃபுளோரோ என்பவர் ஸ்பானிஷ் நாட்டின் நடிகை என்பது பலர் அறிந்ததே. ஆனால் இவர் கடந்த 2013ம் ஆண்டிலேயே தெலுங்கு மொழியில் ஒரு தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து உள்ளார் என்றும் அந்த தொடரில் அவர் சரளமாக தெலுங்கு மொழி பேசியது குறித்து காட்சிகளின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த சீரியலின் ஒரு காட்சியில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது போன்றும், அப்போது அவர் தெலுங்கில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கும், ஸ்பானிஷ் மொழியில் இருந்து தெலுங்கு மொழிக்கும் மொழி பெயர்த்து பேசி வருவதும் பேசுவது போன்ற காட்சி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அடிமடியில் கை வைக்க வேண்டாம்: அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9 இளம்பெண்களை 60 நாட்களாக பூட்டி வைத்த ஹவுஸ் ஓனர்: அதிர்ச்சி தகவல்

நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த 9 இளம் பெண்கள் பஞ்சாப் மாநிலத்தில் தங்கியிருந்து பணி செய்து கொண்டிருந்த நிலையில் அந்த 9 பெண்களை கடந்த 60 நாட்களாக ஹவுஸ் ஓனர் பூட்டி வைத்து இருந்த தகவல்

ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? திருமணம் குறித்து வரலட்சுமி விளக்கம்

நடிகை வரலட்சுமி திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் என்பது தெரிந்ததே. ஏற்கனவே விஷாலை வரலட்சுமி திருமணம் செய்யப் போவதாக

போனிகபூர் வீட்டில் உள்ள நபருக்கு கொரொனா: அதிர்ச்சி தகவல்

https://www.indiaglitz.com/boney-kapoor-on-covid-19-coronavirus-valimai-producer-thala-ajith-tamil-news-260763

பிரதமர் மீது கல்லெறிந்தால் இதுதான் நடக்கும்: ஜோதிமணி எம்பிக்கு நடிகை எச்சரிக்கை

நேற்று தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தின் போது கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.