close
Choose your channels

மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

Tuesday, May 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக அளவில் புகழ்பெற்ற இணைய தொடர்களில் ஒன்று மணி ஹெய்ஸ்ட் என்பது தெரிந்ததே, இந்த தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பதும் இந்த தொடர் ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது வெளியாகும் என்று கோடிக்கணக்கானோர் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மணி ஹெய்ஸ்ட் 5வது சீசன் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மணி ஹெய்ஸ்ட் ஐந்தாவது சீசன் 2 பகுதிகளாக வெளியாக இருப்பதாகவும் முதல் பகுதி செப்டம்பர் 3ஆம் தேதியும் இரண்டாம் பகுதி டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணி ஹெய்ஸ்ட் தொடரில் கேரக்டர் அனைத்துமே ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக புரபொசர் கேரக்டரும், அதேபோல் இந்த தொடரில் உள்ள மற்ற கேரக்டர்களான டோக்கியோ, நைரோபி, பெர்லின், ரியோ, டென்வர் ஆகிய கேரக்டர்களும் தொடரின் விறுவிறுப்புக்கு உதவும் கேரக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.