close
Choose your channels

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்!

Tuesday, May 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மான்ஸ்டர்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல் என புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான சென்சார் பணிகளும் முடிந்துவிட்டது.

இன்று இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். சென்சார் பணிகள் முடிந்ததை அடுத்து இந்த படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'பொட்டன்ஷியல் ஸ்டுடியோ' உறுதி செய்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் சபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.