இந்தியாவில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 என்று தகவல் வந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 என்றும் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,489 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்தியாவில் மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 2916 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அங்கு 187 பேர் உயிரிழந்ததாகவும் 295 பேர் குணமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

இதேபோல் உலகம் முழுவதும் வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் 20,82,822 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,603 ஆக என்றும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 5,10,129 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் உலகில் அமெரிக்காதான் இப்போதைக்கு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,44,089 ஆக உயர்ந்துள்ளது என்பதும் அங்கு கொரோனாவுக்கு 28,529 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது