இந்தியாவில் கொரோனா தொற்று 27,892ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் சுமார் ஆயிரம் வரை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917ஆக இருந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,892 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 லிருந்து 872 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914 லிருந்து 6,185 ஆக உயர்ந்துள்ளது என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 8,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

உலக அளவில் 2,994,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உலகம் முழுவதும் 206,992 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்பதும் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 226,629 பேர்களும், இத்தாலியில் 197,675 பேர்களும், பிரான்ஸில் 162,100 பேர்களும், ஜெர்மனியில் 157,770 பேர்களும், இங்கிலாந்தில் 152,840 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: மூவர் கைது

ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது சொந்த ஊருக்கு நடந்து சென்ற பெண் ஒருவர் இரவில் பள்ளி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர் அந்த பள்ளியில் மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்

ஜோதிகாவுக்கு ஆதரவாக 30 தயாரிப்பாளர்கள்: சீரியஸ் ஆகிறது ஓடிடி விவகாரம்

ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால்

ஏழைகளுக்கு ஒரு கிலோ கோதுமை மட்டுமே கொடுத்த அமீர்கான்: ஆனால் அதில் ஒரு ஆச்சரியம்!

கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர் பலர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

அஜித் ரசிகருக்கு போய் சேர்ந்த விஜய் கொடுத்த உதவித்தொகை ரூ.5000!

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வறுமையில் வாடும்

முதல்முறையாக மினிமம் கியாரண்டி இல்லாமல் வெளிவரும் விஜய்யின் 'மாஸ்டர்' 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் படப்பிடிப்பின்போதே கிட்டத்தட்ட அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே.