உத்திரமேரூரில் கல்குவாரி விபத்து- 2 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணி தீவிரம்!

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்றில் இன்று மதியம் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. கல்குவாரியின் ஒரு பகுதியில் இருந்த கற்கள் முழுவதும் சரிந்து விழுந்ததால் அதில் 40 க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என்றும் தற்போதுவரை 2 உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

உத்திரமேரூர் அடுத்த மதூர் எனும் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் எப்போதும்போல 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். மேலும் ஜேசிபி வாகனங்கள் மற்றும் லாரிகள் என பலவும் மும்முரமாக வேலைப் பார்த்து வந்தபோது இன்று மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் கல்குவாரியில் நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களும் நிலச்சரிவில் சிக்கி கொண்டு விட்ட நிலையில் அங்கு மீட்புப்பணி தீவிரப்படுத்தப் பட்டு இருக்கிறது. தற்போதுவரை அந்த விபத்தில் 2 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த விபத்தினால் கல்குவாரிக்கு செல்லும் சாலைகளும் சீர்குலைந்து இருக்கிறது. இந்நிலையில் அங்கு வருவாய்த் துறையினர் உட்பட பலரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

More News

'கைதி' 'மாஸ்டர்' பிரபலத்திற்கு திருமணம்; லோகேஷ் வாழ்த்து

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 3 திரைப்படங்கள் உள்பட ஒருசில திரைப்படங்களில் எடிட்டராக பணிசெய்த ஃபிலோமின்ராஜ் என்பவருக்கு திருமணம் நடந்ததை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் 

டீ குடிக்கும் கேப்பில் காணாமல் போன அரசு பேருந்து? அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் அரசு பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுநர், டீ குடிக்க சென்றபோது அதை மர்ம நபர் கடத்தி சென்று சில மைல் தூரத்தில் நிறுத்திவிட்டு போன சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீதிமன்ற வழக்கின்போது லைவ்வில் ஓடிய உடலுறவு காட்சிகள்? அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா தாக்கத்தினால் உலகம் முழுவதும் தற்போது ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து விட்டது.

டீச்சரா நீங்கள்? விவசாயப் போராட்டத்தில் பதிலடி கொடுத்த பிரபலங்களுக்கு இளம் நடிகை கேள்வி!

தமிழில் சில வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் முன்னணி நடிகை டாப்ஸி. அவர் தற்போது விவசாயப் போராட்டத்தைக் குறித்து

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: 'விஷமக்காரன்' இயக்குனர் பேச்சு!

'கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்கக் கூடாது' என 'விஷமக்காரன்' படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது