close
Choose your channels

மொட்டை ராஜேந்திரனின் பழைய புகைப்படம்: இணையத்தில் வைரல் ஆவது ஏன்?

Tuesday, August 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் வில்லத்தனத்துடன் கூடிய காமெடி கேரக்டரில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரனின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

இயக்குனர் பாலா இயக்கிய பிதாமகன் என்ற படத்தில் ஸ்டண்ட் நடிகராக அறிமுகமானவர் மொட்ட ராஜேந்திரன். அதன் பிறகு பாலா இயக்கிய ’நான் கடவுள்’ படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தார். அதன்பின் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் மொட்ட ராஜேந்திரன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை மோகன்லால் ரசிகர்கள் அதிக அளவு பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மொட்டை ராஜேந்திரனை மொட்டையுடன் மட்டுமே இதுவரை ரசிகர்கள் பார்த்த நிலையில் இந்த புகைப்படத்தில் அவர் முடியுடன் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். மோகன்லால் உடன் இணைந்து பணியாற்றிய போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.