close
Choose your channels

நாகினி நடிகைக்குத் திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் “நாகினி“ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனிராய். இந்தியா முழுக்கவே ஏராளமான ரசிகர்களை கொண்ட இந்த நடிகையின் திருமணம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்தியில் எடுக்கப்பட்ட “நாகினி“ தொடர் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்படுவதால் தமிழ் ரசிகர்களும் இந்த தொடரை விரும்பி பார்த்து வருகின்றனர். கடந்த 2015 முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்தத் தொடர் 1, 2, 3, 4 தற்போது 5 என பல சீசன்களைக் கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் முக்கியக் கதாபாத்திரமான பாம்பு வடிவத்தில் (ஷிவானியாக) நடிகை மெளினிராய் நடித்துள்ளார். மேலும் ரன்பீர் கபூர், ஆலியாபட் இணைந்து நடித்திருக்கும் “பிரம்மாஸ்திரா‘‘ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மௌனிராய் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சூரஜ் நம்பியார் என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதையடுத்து தற்போது நடிகை மௌனிராய்- சூரஜ்ஜின் திருமணம் வரும் 27 ஆம் தேதி கோவாவில் நடைபெற இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

மேலும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இந்தத் திருமணத்தில் கரண் ஜோஹர், மணீஷ் மல்கோத்ரா போன்ற பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை மௌனிராயின் திருமணத் தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.