close
Choose your channels

Mr.லோக்கல் டிரைலர்-ஆடியோ ரிலீஸ் தேதி !

Sunday, April 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயனும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்த 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தெரிகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி, ஆர்யா, ஜீவா, உதயநிதி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். ராஜேஷ் எம் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.