close
Choose your channels

'SK 13' பர்ஸ்ட்லுக் இதுதான்

Saturday, February 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயனின் 13வது படமான SK 13' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் 'Mr.லோக்கல்' என செய்திகள் கசிந்தவாறு அதே டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது.

கருப்புக்கலரின் கோட் சூஉட் அணிந்து ஸ்டைலாக சிவகார்த்திகேயன் உட்கார்ந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளதால் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இந்த படம் வரும் கோடை விடுமுறை வெளியீடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். ராஜேஷ் எம் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.