close
Choose your channels

சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, February 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய் 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியீடு குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர். இதன்படி இந்த படம் வரும் மே மாதம் 1ஆம்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த தகவலால் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.