close
Choose your channels

Mr.லோக்கல் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thursday, May 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய Mr.லோக்கல்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் புரமோஷன் போஸ்டர்களில் மே வெளியீடு' என்று வந்ததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் இந்த படத்தின் பேட்ச்வொர்க் பணிகள், சென்சார் பணிகள் முடிவடையாததால் திட்டமிட்ட நாளில் ரிலீஸ் ஆகுமா? என்று ஒருசில ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் 'Mr.லோக்கல்' திரைப்படம் மே 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி என்று அறிவித்ததோடு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. எனவே இந்த படம் அடுத்த வாரம் வெள்ளியன்று வெளியாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.