'சன்' நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Tuesday,May 07 2019]

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 16வது படமான 'எஸ்கே 16' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் மற்றும் வியாபாரம் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் தற்போது அவரது இன்னொரு படத்தின் சாட்டிலைட் உரிமைத்தையும் அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'எஸ்.கே 16' படத்தில் இணைந்த இரண்டு பிரபல இயக்குனர்கள்!

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அவருடைய 16வது படம் குறித்த தகவல்கள் ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒருமுறை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்!

நடிகர், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மான்ஸ்டர்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதியின் 'எதிர்பார்த்த' டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

விஷாலின் 'அயோக்யா' சென்சார் தகவல்

விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து வந்தது

தல தோனி மகளை கடத்த திட்டமிடும் பிரபல நடிகை!

தல தோனியை பிடிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் அணியை சொந்தமாக வைத்திருக்கும் நடிகை ப்ரித்திஜிந்தாவே