ரஜினிக்கு மட்டுமல்ல.. 'ஜெயிலர்' லாபத்தை மருத்துவ துறைக்கும் பகிர்ந்த சன் பிக்சர்ஸ்..!

  • IndiaGlitz, [Thursday,September 07 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் திரையுலகில் வசூல் சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம். இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய தொகை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபமாக கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுக்கு கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் பகிர்ந்து அளித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினிக்கு மட்டும் இன்றி மருத்துவத் துறைக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லாபத்தின் சில பகுதிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 100 குழந்தைகளின் இதய சிகிச்சைக்காக ஒரு கோடி ரூபாயை கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதி அவர்கள் வழங்கி உள்ளார்.

அதேபோல் சென்னை அடையாறு புற்றுநோய் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவியாக 60 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படத்தின் வெற்றியை அந்த பட குழுவினர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், அதையும் தாண்டி மருத்துவத் துறைக்கும் லாபத்தை பகிர்ந்து கொள்வது என்பது ஒரு சிறந்த ஆரம்பமாக கருதப்படுகிறது. அதேபோல் திரையுலகில் வெற்றி பெறும் பிற தயாரிப்பாளர்களும் இதனை கடைபிடித்தால் மருத்துவத்துறையும், மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இசைஞானி இசையில், ஸ்வேதா மேனன் குரலில் உருக வைக்கும் பாடல்.. 'ஆர் யூ ஓகே பேபி' சிங்கிள்..!

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'ஆர் யு ஓகே பேபி'.  இந்த படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில்

40 நாட்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்: 'லியோ' செய்த சாதனை..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பிரிட்டன் நாட்டில் நடந்தது.

மீண்டும் 'லால்சலாம்' படத்திற்கு வந்த ரஜினிகாந்த்.. ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' என்ற படத்தில்

'மாமன்னன்' இறுதி காட்சியை வெளியிட்டு உதயநிதிக்கு வாழ்த்து கூறிய மாரி செல்வராஜ்: வீடியோ வைரல்..!

இயக்குனர் மாரி செல்வராஜ் 'மாமன்னன்' படத்தின் இறுதி காட்சியை வெளியிட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

ஹாலிவுட்டில் வாக்கிங் போகும் வேட்டையன் - சந்திரமுகி.. வேற லெவல் புரமோஷன்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான 'சந்திரமுகி 2' திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய