கொல்கத்தா போலீசாரை வியக்க வைத்த தோனி

  • IndiaGlitz, [Thursday,September 21 2017]

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று கொல்கத்தாவில் 2வது போட்டி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் மழை பெய்ததால் நேற்று இந்திய அணி வீரர்களின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தல தோனி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் அருகே இருந்த காவல்துறையின் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தனர்.

ஒரு சிறிய பயிற்சிக்கு பின் தோனியின் குறிபார்த்து சுடும் திறனை பார்த்து கொல்கத்தா போலீசார் வியப்படைந்தனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் கொல்கத்தா போலீஸார், சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். பின்னர் இந்த புகைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக சில நிமிடங்களில் தோனி துப்பாக்கி சுடும் வீடியோவையும் வெளியிட்டனர். இந்த வீடியோவும், புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

More News

சாண்டி டைவர்ஸ் செய்ய என்னோட டார்ச்சர்தான் காரணம்: காஜல்

பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காஜல், பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது அனைவரும் தெரிந்ததே. இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்ன

இந்தியாவில் முதல்முறையாக பயோமெட்ரிக் சிஸ்டம்: ஐதராபாத் விமான நிலையத்தில் தொடக்கம்

விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமானால் விமானம் கிளம்புவதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பே விமான நிலையம் சென்று உடமைக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு முத்திரை மற்றும் போர்டிங் பாஸ் பெற வேண்டும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிரடி சலுகை: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிர்ச்சி

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சமீபத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. ரூ.309க்கு தினசரி 1GB டேட்டா மற்றும் எண்ணிலடங்கா இலவச அழைப்புகள் என சலுகை

வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் கட்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சமீபத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் செய்த வேலை நிறுத்ததம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சரியாக இயங்கவில்லை

இயக்குனர் அட்லிக்கு மெர்சலான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவரும் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றவரும் குறிப்பாக இயக்கிய