'தல' ஓய்வு முடிவு அறிவிப்பா? இன்று இரவு பிரஸ்மீட்

இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி, இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியிலிருந்து தல தோனி ஒய்வுபெற்ற நிலையில் ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறவிருப்பதாக இன்றைய பிரஸ்மீட்டில் அவர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் தொடரில் தோனி தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கவிருப்பதை மறைமுகமாக கேப்டன் விராத் கோஹ்லி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலேயா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் தோனியுடன் சிறப்பான இன்னிங்ஸை விளையாடியதை நினைவு கூர்ந்த விராட் கோலி ‘தோனியுடன் விளையாடிய அந்த போட்டியை தன்னால் மறக்க முடியாது என்றும், அது ஒரு ஸ்பெஷல் நைட் என்றும், தோனி தன்னை ஃபிட்நெஸ் டெஸ்ட் போன்று ஓட வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட் தோனிக்கு விடைகொடுத்து அனுப்பும் டுவீட்டாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

More News

பிக்பாஸில் கேம் மட்டும் தான் விளையாடணுமா? பிரபல இயக்குனர் கேள்வி!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வரும் ஒரு கருத்து 'இங்கே வந்த வேலையை மட்டும் பார்க்கணும், கேம் மட்டும்தான் விளையாடணும். அழக்கூடாது

'ஜெயலலிதா' படத்தில் இணைந்த ஹாலிவுட் கலைஞர்!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் ஏஎல் விஜய் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. '

இனிமே லாஸ்லியா கூட பேசினே... சேரனை மிரட்டும் மகள்

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் கடந்த இரண்டு நாட்களாக வருகை தந்து நிகழ்ச்சியை சுவராஸ்யம் ஆக்கிக்கொண்டிருக்கும் நிலையில்

'காப்பான்' படத்திற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன் பிரமோஷன் பணிகளும் ஜெட் வேகத்தில் நடந்து வருவது தெரிந்ததே

இயக்குனர் கவுதம்மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் எச்சரிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குனர் விஜய் 'தலைவி' என்ற பெயரில் இயக்கி வரும் நிலையில், இயக்குனர் கவுதம்மேனன்,