பெண்களுக்காக 20 திரையரங்குகளில் சிறப்பு காட்சி: பிரபல நடிகை அறிவிப்பு..!.

  • IndiaGlitz, [Wednesday,September 13 2023]

நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் பெண்களுக்காக சுமார் 20 திரையரங்குகளில் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படத்தில் அனுஷ்கா மற்றும் நவீன் பொலிஷெட்டி நடித்த நிலையில் இந்த படத்தை மகேஷ் பாபு இயக்கியிருந்தார். திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் ஒரு பெண்ணின் முயற்சி மற்றும் ஆண் துணை இல்லாமல் வாழலாம் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வரும் அவர் இறுதியில் எடுக்கும் முடிவு ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் சுமார் 20 திரையரங்குகளில் இந்த படம் பெண்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக அனுஷ்கா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வரும் 14ஆம் தேதி இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படும் திரையரங்குகளின் பெயர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். பெண்கள் இந்த படத்தை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது என்றும் இந்த காட்சியை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

பூக்கள் தான் பந்து, குச்சி தான் பேட்.. கிரிக்கெட் விளையாடும் மாளவிகா மோகனன் வீடியோ..!

நடிகை மாளவிகா மோகனன் ஒரே ஒரு குச்சியை வைத்து கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ]

தனிமையில் ஆபாச படம் பார்த்தால் குற்றம் அல்ல: கேரள உயர் நீதிமன்றம் கருத்து..!

தனிமையில் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  

பிரபாஸ் நடித்த 'சலார்' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு.. ரசிகர்கள் அதிருப்தி..!

பிரபல நடிகர் பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என ஏற்கனவே சமூக வலைதளங்களில்

அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன்: மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரல்..!

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்பதும்  செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்ற அழைப்பிதழ்

இனிமேல் சரவெடி தான்.. அடுத்தடுத்து வரவிருக்கும் 'லியோ' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்த  'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம்  அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும்