close
Choose your channels

தனுஷின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்

Sunday, September 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தி உருவான 'வடசென்னை' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகவுள்ளது. அதேபோல் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் தனுஷின் 'மாரி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தனுஷ் நடிக்கவுள்ள இன்னொரு படம் குறித்தும் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.

முண்டாசுப்பட்டி' படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்பம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் தனுஷின் அடுத்த படத்தை அடுத்த ஆண்டு இயக்கவுள்ளதாக ராம்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் மட்டுமின்றி மேலும் இரண்டு தனுஷ் படங்களையும் தாணு அவர்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.