கொரோனா எதிரொலியால் கடும் வீழ்ச்சியை சந்தித்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,April 07 2020]

 

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. பங்கு சந்தை வீழ்ச்சி, ஏற்றுமதி, இறக்குமதி மொத்த உள்நாட்டு உற்பத்தி என அனைத்திலும் கடுமையான நெருக்கடியை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன நிலையில் உலக பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி 8 இடங்கள் சரிந்து 17 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கொரோனா எதிரொலியால் கடந்த 2 மாதங்களாக உலக நாடுகள் பொருள் உற்பத்தியிலும் நுகர்விலும் பெரும் மாற்றங்களை சந்தித்துவருகின்றன. இதனால் இந்தியாவின் முதல் பணக்காரராக அறியப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் அவருடைய சொத்து மதிப்பு 28% குறைந்துள்ளதாக ஹருண் நிறுவனம் திரட்டிய தகவல் அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் ரூ.2,280 கோடி குறைந்து மொத்தம் 2 மாதங்களில் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 400 கோடி ரூபாய் குறைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 800 கோடியாக இருக்கிறது.

முகேஷ் அம்பானியை போன்றே கவுதம் அதானியின் சொத்து மதிப்பு குறைந்திருக்கிறது. அவருடைய சொத்து மதிப்பில் இது 37 % எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. உதய்கோடக், எச்.சி.எல் டெக்னாலஜி, அதானி போன்றோர்களின் சொத்து மதிப்புகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றன. உலகில் முன்னணி பணக்காரர்களாக இருக்கும் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனம் போன்றோர்களின்சொத்து மதிப்புகளும் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உலகின் முதல் பணக்காரராக இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் முதல் பணக்காரராகத் தொடர்ந்து நீடிக்கிறார். அவருடை சொத்து மதிப்பிலும் 9% வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. தற்போது சீனா மட்டுமே பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. இதனால் உலக பணக்காரர்களின் பட்டியல் வரிசை மேலும் மாற்றமடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More News

சென்னை பீனிக்ஸ் மால் சென்ற 3300 பேர்களுக்கு சோதனை: எத்தனை பேருக்கு கொரோனா?

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த 6 பெண்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அந்த 6 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சீன அதிபருக்கும் கடிதம் எழுதலாமே: கமல்ஹாசனை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கமலஹாசனின் இந்த கடிதத்தை கிண்டலடித்துள்ளார்

இரண்டே நாளில் தூய்மை பணியாளர்களுக்கு தோழியாகிய பிரபல விஜே

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தன்னலம் கருதாது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள்

கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும்: கொரோனா பாதித்தவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி தெரிந்தவர்கள் தாங்களாகவே அரசு மருத்துவமனைக்கு

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம்!!! பிறந்த குழந்தைக்கும் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதனை!!!

இலங்கையில் களுத்துரை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்