உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை! ரஜினிக்கு மும்பை தாதா மகன் மிரட்டல்

  • IndiaGlitz, [Saturday,May 13 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் கதை மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் நிஜவாழ்க்கை சம்பந்தப்பட்டது என்று சமீபத்தில் ஒரு வதந்தி எழுந்தது. இதற்கு இயக்குனர் ரஞ்சித் மறுப்பும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது தந்தை தாதா இல்லை என்றும், தனது தந்தையின் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் திரைப்படத்தில் ரஜினி நடித்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது: 'என்னுடைய வளர்ப்புத் தந்தை, ஹாஜி அலிமஸ்தான் 'பாரதிய மைனாரிட்டி சுரக்‌ஷா மஹாசங்' என்ற கட்சியை நிறுவியவர். இயக்குநர் ரஞ்சித், உங்களை வைத்து எடுக்கிற படத்தில் என்னுடைய தந்தையை மும்பையின் கள்ளக் கடத்தல் தலைவனாகவும், நிழலுலக தாதாவாகவும் சித்தரித்துக் காட்ட உள்ளதாக பத்திரிகைகளில் படித்தேன். இது வேண்டாத வீண் வேலை. என் தந்தை மீது குற்றச் செயலுக்காக எந்த கோர்ட்டும் தண்டனை அளிக்கவில்லை. தேவையில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப்படுத்தினால், அதன் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்" என்று எழுதியுள்ளார்.

ரஜினியின் போயஸ் கார்டன் முகவரிக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'AAA' படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிறப்பு தோற்றம்

சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் ''AAA' எனப்படும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகவுள்ளது என்ற அதிகாரபூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது.

ரஜினி-ஷங்கரின் '2.0: இன்று முதல் முக்கிய பணி தொடக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

கொஞ்சமாவது அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்: 'விவேகம்' எடிட்டர் காட்டம்

நேற்று அதிகாலை 12.01 மணிக்கு தல அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாகி அனைத்து தென்னிந்திய சாதனைகளையும் தகர்த்தெறிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு தலைவரின் அன்புக்கட்டளைகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த ஏப்ரல் மாதம் 12 முதல் 16 வரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்

'தளபதி 61' படத்தில் மாயாஜாலம் செய்யும் விஜய்யின் 3வது கேரக்டர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடந்து வருகிறது.