ஊரடங்கின்போது காதலருடன் காரில் சுற்றிய நடிகை மீது வழக்குப்பதிவு!

  • IndiaGlitz, [Thursday,June 03 2021]

ஊரடங்கின்போது காதலனுடன் காரில் சுற்றிய நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, சமீபத்தில் வெளியான சல்மான் கானின் ’ராதே’ படம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் திஷா பதானி தனது காதலருடன் இரவு நேரத்தில் காரில் சுற்றியுள்ளதாக தெரிகிறது. அப்போது போலீசார் அவர்கள் சென்ற காரை வழிமறித்து விசாரித்தபோது சரியான காரணத்தைக் கூறவில்லை. இதனை அடுத்து ஊரடங்கு விதிகளை மீறியதாக திஷா பதானி மற்றும் அவரது காதலர் டைகர் ஷெராப் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

More News

இதெல்லாம் என்ன மனநிலை? பிரபல இயக்குநரின் ஆவேசத்திற்கு என்ன காரணம்?

தெலுங்கில் “போக்கிரி” , “பிசினஸ் மேன்” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் பூரி ஜெகநாதன்.

இளையராஜாவுக்கு தனது படத்தை போட்டு காட்ட முடிவு செய்த விஷால்!

நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் 'துப்பறிவாளன்'. இந்த படத்தின் அடுத்த பாகமான 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு

48 ஆவது திருமண நாளைக் கொண்டாடும் பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகள்! திரையுலகினர் வாழ்த்து!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிதாப் பச்சன் மற்றும் ஜெயா தம்பதிகள் இருவரும் தங்களது 48 ஆவது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸ் ஓவியாவின் வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை சொன்னாலே உடனே பலருக்கு ஞாபகம் வருவது ஓவியாதான். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை கவர்ந்தார் என்பதும் அவருக்குத் தான் முதன்முதலில் ஆர்மி

விஜய் மகன் சஞ்சய் வீடியோ திடீர் வைரல்!

தளபதி விஜய்யின் மகன் சஞ்சயின் வீடியோ ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.