நீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்போ ஹார்ன் அடி..! ஒலி மாசை குறைக்க மும்பை காவல்துறை செய்த முயற்சி.

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகமாக உள்ளது. அனைத்து நகரங்களிலும் நிலவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக அந்தந்த மாநில அரசுகள் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு இணையாக ஒலி மாசுபாடும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வறிக்கையின்படி இந்தியாவிலேயே மும்பையில்தான் அதிக ஒலி மாசுபாடு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைச் சரிசெய்ய தற்போது அம்மாநில போலீஸார் நூதனமான வழியைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, இந்தியா முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று வண்ண சிக்னல்களோடு சேர்த்து விநாடிகள் பொருத்தப்பட்டிருக்கும் கருவி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.

 

அதில், 90 விநாடிகள் மட்டும் ஒருவர் சிக்னலில் நின்றால் போதும். 90 விநாடிகள் முடிந்த பிறகு தானாக நிறங்கள் மாறிவிடும். இதனால் ஒலி மாசு எப்படி வருகிறது என யோசிக்கலாம், சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் 90 விநாடிகள் முடியும் சில விநாடிகளுக்கு முன்பே ஹார்ன் அடித்து தனக்கு முன்னால் இருப்பவர்களை நகரும்படி எச்சரிக்கை செய்வார்கள். இதன் காரணமாகவே அதிக ஒலி மாசு ஏற்படுவதாக நினைத்த காவலர்கள் டெசிபல் மீட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.

டெசிபல் மீட்டர் என்பது ஒலி அளவைக் கணக்கிடும் கருவி, இதை சிக்னலுடன் இணைத்து வைத்துள்ளனர் காவலர்கள். சிக்னலில் 90 விநாடிகள் ஓடும்போது டெசிபல் மீட்டரும் தன்னைச் சுற்றியிருக்கும் ஒலி மாசைக் கணக்கிடும். அளவுக்கு அதிகமான ஒலி மாசு ஏற்பட்டால் குறைந்துகொண்டு வந்த சிக்னல் விநாடிகள் மீண்டும் முதலிலிருந்து தொடங்கும். அதாவது, அனைத்துப் பயணிகளும் இன்னும் 90 விநாடிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டிய நிலை வரும். இதன் காரணமாக தற்போது யாரும் ஹார்ன் அடிப்பதில்லை. ஹார்ன் அடித்தால் காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற டிஜிட்டல் பதாகைகளும் அவ்வப்போது தோன்றுகின்றன.

சிக்னலில் காத்திருக்க விரும்பாதவர்கள் பிறரையும் ஹார்ன் அடிக்க விடுவதில்லை. இதுதொடர்பான விழிப்புணர்வு வீடியோவையும் மும்பை போலீஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது நேற்று முதல் வைரலாகி வருகிறது.அதில், 'காத்திருப்பதற்கு உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால் தயங்காமல் ஹார்ன் அடியுங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை போலீஸின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

More News

எல்.ஐ.சி பங்குகள் விற்பனை, தனிநபர் வருமான வரிச்சலுகை: பட்ஜெட்டில் மேலும் சில முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை முதல் 2020ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையை பாராளுமன்றத்தில் படித்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனிநபர் வருமான வரிச்சலுகை

TNPSCயா? TNPPSCயா? கமல்ஹாசனின் நச் டுவீட்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் செய்திகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்வாவில் தொடங்கி அல்வாவில் முடிந்த பட்ஜெட்: கமல் கருத்து

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் அவர் தாக்கல்

ஒரே நாளில் பி.எஸ்.என்.எல்லில் இருந்து வெளியேறும் 80,000 ஊழியர்கள்..! இந்தியாவிலேயே முதல்முறை.

எம்.டி.என்.எல் நிறுவனத்திலிருந்தும் 14,378 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ரூ.40.000 கோடி கடன் வைத்துள்ளன

இந்தியச் சுற்றுச்சூழல் ஆய்வாளர் பவன் சுகதேவிற்கு நோபால் பரிசான  “டைலர் விருது”

சுற்றுச்சூழல் துறையில் நோபால் பரிசான “டைலர் விருது” இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் பவன் சுகதேவ் அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.