close
Choose your channels

தப்பை தப்புன்னு ஒத்துக்கோங்க: மும்தாஜிடம் மோதிய விஜி

Friday, September 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகத் தினமும் யாரிடமாவது சண்டை போடுவார். அந்த வகையில் தற்போது மும்தாஜ் தினமும் யாரிடமாவது சண்டை போட்டு வருகிறார். நேற்று கிச்சன் சாம்பியன் பட்டம் வென்ற செண்ட்ராயன், கள்ளங்கபடம் இல்லாமல் சொன்ன ஒரு விஷயத்தை சீரியஸாக எடுத்து அவரிடம் சண்டை போட்டார் மும்தாஜ். பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் சரியாக டாஸ்க்கை செய்து முடிக்க ,மும்தாஜ் மட்டும் செய்யாததால் அதனை மறக்கடிக்க யாரிடமாவது சண்டை போட்டு திசைதிருப்பும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் மும்தாஜ் மற்றும் விஜி இடையே மோதல் ஏற்படுகிறது. மும்தாஜ் செய்த ஒரு தவறை விஜி சுட்டிக்காட்ட, அதனால் ஆத்திரமடையும் மும்தாஜ் அவரிடம் வாக்குவாதம் செய்கிறார். தப்பை தப்பு என்று ஒப்புக்கொள்ளுங்கள். அதேபோல் அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்யும்முன் நாம் சரியாக இருக்கின்றோமா? என்பதையும் பார்த்து கொள்ளுங்கள் என்று விஜி சொல்ல இதனால் மும்தாஜ் மேலும் ஆத்திரம் அடைகிறார்.

கடந்த பிக்பாஸ் சீசனின் நான்கைந்து பேர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தனர். ஆனால் இந்த சீசனில் வந்த ஒரே ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளரான விஜயலட்சுமி, மும்தாஜூக்கு மட்டுமின்றி மற்ற அனனத்து போட்டியாளர்களுக்கும் கடும் போட்டியாக இருப்பதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பும் அதிகரித்துள்ளது. இன்னும் மூன்று வாரங்களில் என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.