close
Choose your channels

ரித்விகா கொடுக்கும் டாஸ்க்கை செய்ய மறுக்கும் மும்தாஜ்

Thursday, September 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரித்விகா கொடுக்கும் டாஸ்க்கை செய்ய மறுக்கும் மும்தாஜ்

 

பிக்பாஸ் வீட்டில் மும்தாஜ் ஒருதலைபட்சமாக பாசம் காட்டி வருவது வெட்ட ஏற்கனவே வெளிச்சமாகிவிட்டது. யாஷிகாவுக்காக ஜனனியின் புருவ டாஸ்க்கின்போது இது சீக்கிரம் வளர்ந்துவிடும்' என்று ஜனனிக்கு ஆறுதல் கூறிய மும்தாஜ், விஜயலட்சுமிக்காக ரித்விகா டாட்டூ குத்தியபோது 'வேண்டாம்' என்று மறுத்தார். அதேபோல் ஐஸ்வர்யாவுக்காக செண்ட்ராயனிடம் 'முடியின் கலர் மாற்றுவது ரொம்ப ஈஸி' என்று தெரிவித்த மும்தாஜ், செண்ட்ராயனுக்காக முடியை குறைக்க ஐஸ்வர்யா முன்வந்தபோது 'என்னோட் முடி 2 இன்ச் குறைஞ்சா கூட நான் செத்துருவேன்' என்று ஒரு தடங்கலை ஏற்படுத்தினார்.

ரித்விகா கொடுக்கும் டாஸ்க்கை செய்ய மறுக்கும் மும்தாஜ்

இதனால் மும்தாஜூக்கு யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய பேட்டாக்களிடம் மட்டுமே உண்மையான பாசம் இருப்பது வெளிச்சதுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று ரித்விகாவுக்காக மும்தாஜ் தன்னுடைய முடியை எலக்ட்ரிக் பச்சையாக மாற்றும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனை ரித்விகா மும்தாஜிடம் கூறியபோது அவர் இதை செய்ய மறுத்துவிட்டார். என்னை சுயநலவாதி என்று நினைத்து கொண்டாலும் பரவாயில்லை, என் முடியின் கலரை மாற்ற முடியாது என்று கூறினார்

எனக்காக நீங்கள் இதை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று ரித்விகா மீண்டும் கேட்டபோது, 'இதை நான் என் அம்மாவுக்காக கூட செய்ய மாட்டேன்' என்று முகத்தில் அடித்தால்போல் கூறிவிட்டார். இதே டாஸ்க் ஐஸ்வர்யா அல்லது யாஷிகா காப்பாற்றப்பட கொடுத்திருந்தால் மும்தாஜ் நிச்சயம் சம்மதித்திருப்பார் என்றே கருதப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.