ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த புதுமாப்பிள்ளை நடிகர்

  • IndiaGlitz, [Thursday,June 14 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை அருகே விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும், மற்றொரு முக்கிய வேடத்தில் பாபிசிம்ஹாவும் நடிக்கவுள்ளனர்.

மேலும் இந்த படத்தில் சிம்ரன் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல காமெடி நடிகர் முனிஷ்காந்த் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவருக்கு கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முனிஷ்காந்த் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் நடித்த 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே

More News

அஜித் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டது ஏன்? புதிய தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருவது தெரிந்ததே.

நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய ரொமான்ஸ் பாடல்

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதும் தெரிந்ததே.

நானி-ஸ்ரீரெட்டி சர்ச்சை குறித்து விஷாலின் அதிரடி கேள்வி

கடந்த சில மாதங்களாகவே பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, டோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே

கீர்த்திசுரேஷை அட்டாக் செய்யும் விஜய் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் 'தளபதி 62'.

நயன்தாராவால் பாரீஸ் வரை புகழ் பெற்ற யோகிபாபு

நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' என்ற படத்தில் அவரை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்த முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு பாரிஸ் வரை புகழ் கிடைத்துள்ளது